செய்.. அல்லது செய்..

பிப்ரவரி 22, 2012

அறிவை விரிவு செய்..

ஆற்றலை ஒழுங்கு செய்..

அழகை நுழைவு செய்..

அறிவுரை நடவு செய்..

 

வித்தைகள் தெரிந்து செய்..

விஷயங்கள் அறிந்து செய்..

விவரங்கள் புரிந்து செய்..

செய்வதை தெளிந்து செய்..

 

அனைத்தையும் பதிவு செய்..

அனுபவம் கலந்து செய்..

நிகழ்நொடி உணர்ந்து செய்..

முழுதென நிறைந்து செய்..

 

கற்பனை இனிக்கச் செய்..

உண்மையும் இருக்கச் செய்..

எழுத்துக்கள் மணக்கச் செய்..

என்றைக்கும் நிலைக்கச் செய்..

 

தயக்கங்கள் அழித்து செய்..

தவறுகள் ஒழித்து செய்..

உள்ளுக்குள் விழித்து செய்..

செவ்வென செழித்து செய்..

 

உன்னத தன்மை செய்..

உயிருக்குள் மென்மை செய்..

உலகுக்கு நன்மை செய்..

உனக்குள்ளே உன்னை செய்..

 

செய்.. நல்லது செய்.. – நீ

செய்.. அல்லது செய்..