இன்று – 26/10/2011…

ஒக்ரோபர் 26, 2011

இளைய தளபதி நடிப்பில்.. ஜெயம் ராஜா இயக்கத்தில்..

விஜய் ஆண்டனி இசையில்.. ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில்.. 

அடியேன் எழுதிய “வேலா.. வேலா.. வேலாயுதம்..” பாடலோடு.. 

இன்று வேலாயுதம் திரையில்….

.

Advertisements

தினங்கள் அழகடைதல்…

ஒக்ரோபர் 25, 2011
 
 
தீபத்தின் வெளிச்சம்
நம் இருளகற்றும் பொழுதுகளில்..
 
புத்தாடை.. பட்டாசு.. இனிப்போடு..  
குட்டிக் குறும்புகள் தித்திப்பு சிரிப்பு சிதறும் நொடிகளில்..
 
தினம் தினம் நில்லாமல் நகரும்  
நாட்களின் வரிசைகதியில்..  
சட்டென புது வசந்தமாய் வந்து  
புன்முறுவல் சிந்தும்..
பண்டிகை தினங்களின் தருணங்களில் எல்லாம்..  
 
நம் வாழ்வும் உறவும்
அழகடைகிறது இன்னும் இன்னும்..
 
பிரியம் நிறைந்த அத்தனை இதயங்களுக்கும்
பிரகாச தீப ஒளி  தின வாழ்த்துக்கள்…
 
 
.
 

வெற்றுத் தனிமை..

ஒக்ரோபர் 8, 2011
 
 
அறிவியல் பெயரோ… அனுபவப் பெயரோ..
பார்த்ததும் என்ன பெயர் என்று தெரியாத..
 
போகும்.. வரும்..  நிற்கும்..
ஆட்கள் கூட்டமில்லாத  ஒரு ஊரில்..
 
எப்போதாவதோ வரும்..
என்றைக்காவதோ நிற்கும்.. 
ரயிலுக்கான  பழைய  பிளாட்பார மேடையில்..
 
சராசரி சத்தங்களும் அற்று
தனித்திருக்கும் அந்த ஒற்றை மரம்..
 
வெறுமையோடு கேட்டுக் கொண்டிருக்கிறது
காற்றில் அசைவெடுக்கும்
அதன் உதிர்ந்த  சருகுகளின்  பாடலை..
 
 
.