இன்று – 28/08/2011…
ஓகஸ்ட் 28, 2011அடியேன் எழுதிய பாடலோடு விஜய் நடிப்பில்.. ஜெயம் ராஜா இயக்கத்தில்.. விஜய் ஆண்டனி இசையில் “வேலாயுதம்” இசை வெளியீடு…
.
இன்று – 26/08/2011…
ஓகஸ்ட் 26, 2011தெய்வத் தாய்…
ஓகஸ்ட் 26, 2011கருவறையை நிரப்பாத கற்புத்தாய்.. – நீ
உலகெங்கும் கருணையை கற்பித்தாய்..
கண்களிலே கனிவு கொண்ட கன்னித்தாய்.. – உன்
புன்னகையால் பூமியை நீ புதுப்பித்தாய்..
உள்ளமெல்லாம் உயர்வு கொண்ட வெள்ளைத்தாய்.. – உன்னை
கடிந்து கொண்ட மனங்களையும் மன்னித்தாய்..
நெஞ்செல்லாம் அன்பையே விதைத்தாய்..
நலிந்தோர் நல்வாழ்விற்கு உழைத்தாய்..
ஓயாது சேவை செய்து இளைத்தாய்..
தொண்டு எனும் தூய அருள் வளர்த்தாய்..
எப்போதும் ஏழை துயர் துடைத்தாய்..
எங்கு கண்ணீரைக் கண்டாலும் துடித்தாய்..
சாமி உள்ளம் கொண்டு.. – நீ
சரித்திரத்தில் நிலைத்தாய்..
இந்த பூமி உள்ள காலம் வரை.. – நீ
ஒருத்திதான் எங்கள் தெய்வத்தாய்..
அழகே.. அமுதே.. அன்னை தெரசா..
உனக்கு முன் இந்த உலகம் என்ன பெருசா…
.
ஆகஸ்ட் 26
அன்னையே.. இது நீ பிறந்த தினம் மட்டுமல்ல..
கருணை பிறந்த தினம்.. காதல் பிறந்த தினம்..
அந்த கடவுள் பிறந்த தினம்….
.
உயரட்டும் உன்னத தேசம்..
ஓகஸ்ட் 15, 2011மற்றவர் உழைப்பைத் தின்று..
மக்களின் பணத்தைத் திருடி..
அரக்கர்களாய் உலா வரும்..
அழுக்கு அரசியல்வாதிகளுக்கு..
அறிவுப் பாடம் புகுத்தி..
அசுத்தம் யாவும் திருத்தி..
ஊழல்கள் அற்ற உன்னத தேசமாய்..
கறைகள் இல்லா கற்பு தேசமாய்..
உயர்த்துவோம் முழுதாய் நமது தாய் மண்ணை..
நிறுத்துவோம் முதலாய் உலகில் இந்தியாவை..
இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு புனிதருக்கும்..
சுத்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களோடு..
பிரியமுடன்…
பிரியன்…
.
இன்று – 15/08/2011…
ஓகஸ்ட் 15, 2011ராஜன் மாதவ் இயக்கத்தில்.. சாஜன் மாதவ் இசையில்.. சேரன்.. பிரசன்னா நடிப்பில்.. அடியேனது நான்கு பாடல்களோடு.. முரண் திரைப்படத்தின் இசை வெளியீடு…
.
என் மையப்புள்ளி…
ஓகஸ்ட் 1, 2011வாழ்க்கை வாகனத்தில் வட்டம் கொண்டு சுற்றுகின்ற
சக்கரமாய் நானிருந்தாலும்
என் மையப்புள்ளி என்னவோ நீதான்…
.