கோவில் பள்ளியறை…

திசெம்பர் 23, 2009

 

காஞ்சிபுரத்துக் கோவில் கருவறைக்குள்
காம சூத்திரம் கற்றுத் தந்த ஐயனைப் பற்றி
படித்ததும் இப்படித்தான் தோன்றியது….

.

 

வேதங்கள் ஓதிக் கொண்டிருக்கும்
பிராமணனின் கண்கள்
வெற்றுடம்பில் நிற்கும்
பெண்சிலையின் மார்பகங்கள் மேல்…

 


உன்னோடு மட்டும்…

திசெம்பர் 15, 2009

 

பார்க்க.. பேச.. அழ.. சிரிக்க..
சண்டையிட.. முத்தமிட..

கோபப்பட.. அணைக்க.. தவிக்க..
தேட.. வாட.. கூட.. பிரிய..

காத்திருக்க.. நோக..
ரசிக்க.. ருசிக்க.. பகிர.. சாய..

ஏங்க.. தூங்க.. நெருங்க.. விலக..
கனவு காண.. தலை கோத.. கை கோர்க்க..
எதிர்பார்க்க.. இம்சிக்க.. சகிக்க.. சுகிக்க..

காதலிக்க.. வாழ..
ஏன் சாகக் கூட சுகமாய்தான் இருக்கிறது
உன்னோடு மட்டும்……….


காத்திருப்புகளில்…

திசெம்பர் 9, 2009

 
நெரிசல் மிகுந்த
கடைகள் நிறைந்த
வாகனங்கள் அடர்ந்த
கார்பன் படர்ந்த
புழுதி படிந்த
அந்த சாலையோரத்தில்…

விதிமுறைகளை மீறி பூத்திருக்கும்
அந்த அழகிய மஞ்சள் நிறப்பூக்கள்
மௌனமாய் என்னிடம் சொல்லியது…

நீ ஆசையோடு எனக்காய்
இவ்வளவு நேரம் காத்திருந்து
இப்பொழுதுதான்
இந்தப் பக்கம் கடந்து போனாய் என…

.


செக்சி லேடி பாடலின் வீடியோ இணைப்பு…

திசெம்பர் 2, 2009

 

வணக்கம்…

நிறைய இதயங்கள் செக்சி லேடி பாடலின் இணைப்பை வேண்டியுள்ளதால் இத்தோடு அதன் வீடியோ இணைப்பை அளிக்கிறேன்…

 

http://www.youtube.com/watch?v=zDdaAq5CsOA/

 

பிரியமுடன்…
பிரியன்…

.