படைப்புகள் பற்றி

எந்தவொரு கலைஞனையும் உலகளவில் உயர்த்துவது அவனது படைப்புகள் !

கவிஞனுக்கு அவனது படைப்பிலக்கியம் !

 

 

கவிதை…

கற்பனையின் விதை !
கருத்தை விதைக்கும் கலை !
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் அனைத்திலும் அழகியலை காட்டும் நிலை !

 

 

 

திரைப்பாடல்…

கதையின் களத்திலிருந்து, சூழ்நிலையின் தன்மைக்கேற்ப பாடுபொருளை பக்குவப்படுத்தி, இசையோடு இசைந்து இணைந்து இதயங்களைப் பரவசப்படுத்துவது !

 

கவிஞனின் பார்வையில் விழும் எதுவும் புதிதாய் கவிதையாய் பிறப்பெடுக்கிறது !
பாடலாசிரியனின் பார்வையில் அதுவே பாடலாக உருவெடுக்கிறது !

 

எளியவர்க்கும் எண்ணியதை எடுத்துச் சொல்வதில் கவிஞனைவிட  பாடலாசிரியனே உயர்ச்சி பெறுகிறான் !

 

ஆம்… ஒரு கவிஞனாக, பாடலாசிரியனாக இப்படிச் சொல்வதில் எனக்கேதும் வருத்தமில்லை !

 

படித்தவர்களுக்கு மட்டுமானது கவிதை !
பாமரன் முதல் பல்கலைக்கழகங்கள்வரை பாரபட்சமின்றி ரசிப்பது பாடல்கள் !

 

எளிதாக சொல்லவேண்டுமென்றால்…

கவிதைகள் படித்தவர்களுக்கு மட்டுமான உயர்ரக உணவு !
பாடல்கள் எல்லோருக்குமான கல்யாண சாப்பாடு !

 

 

கவிஞனுக்கும் பாடலாசிரியனுக்குமுள்ள ஒற்றுமை, வேற்றுமைகளும் விவாதிக்க அழகானது…

 

தமிழால், இலக்கியத்தால், கற்பனையால், சந்தங்களால், புதியன தோற்றுவித்தலால் இருவரும் ஒன்றாகிப் போகிறார்கள்   !

 

இசை நுணுக்கங்களை பிசராமல் கையாளுவதிலும், மெட்டுக்கு சரியாக எழுதுவதிலும், கதையை கச்சிதமாய் பாடல்களுக்குள் பொருத்துவதிலும் இருவரும் சற்று வேறுபடுகிறார்கள் !

 

எனது சிறிய கணிப்பின்படி…

எல்லா பாடலாசிரியர்களும் கவிஞர்கள்தான் !
ஆனால் எல்லா கவிஞர்களும் பாடலாசிரியர்கள் அல்ல !

 

இந்தக் கருத்துக்கள் பலபேருக்கு முரண்படலாம்…

தமிழைத் தாண்டி, இலக்கியங்களைத் தாண்டி, கவிதைகளைத் தாண்டி ஏதோ ஒன்று நிச்சயமாய் பாடலாசிரியனுக்கு வசப்பட்டிருக்கிறது…

 

அதனால்தான் பிறந்த சிலமாதக் குழந்தைகள் முதல் முதிர்ந்த முதுமைகள் வரைக்கும் பாடல்களில் லயித்துப் போகிறார்கள் …

 

பொதுவாகவே இசை எல்லோரையும் வசப்படுத்துவது…

அதற்க்கு மொழிகள் இல்லை… இருந்தபோதும், இசைக்கு கவிதையின் மொழியை பரிசளிக்கும்பொழுது அது இணையில்லா, காலத்தால் அழியா ஒரு சிறந்த வரலாற்றுப் பதிவாகிப்போகிறது…  

 

சூட்சுமப் பெருவெளியில் சுழன்றுகொண்டிருக்கும் இந்த உலகில்…

எனக்கான உடலுயிர் தந்த அம்மையப்பனுக்கும்… 

அறிவைத் தந்த ஆசிரியருக்கும்… 

ஞானம் தந்த இறைவனுக்கும்… 

வாழ்வைத் தந்த தமிழுக்கும்… 

வெற்றித்தோல்விகள் தந்த அனுபவங்களுக்கும்… 

உற்சாகம் தந்த நண்பர்களுக்கும்… 

உத்வேகம் தந்த எதிரிகளுக்கும்… 

உயரம் தருகின்ற ரசிகர்களுக்கும்… 

வரப்போகும் சாதனைகளுக்கும்… 

வாழப்போகும் வரலாற்றுக்கும்… 

எப்பொழுதும் நிலைக்கபோகும் எனது பாடல்களுக்கும்… 

இதுவரை வந்த நேற்றுகளுக்கும்… 

இப்பொழுது இருக்கும் இன்றைக்கும்… 

இனிவரப்போகும் நாளைகளுக்கும்…

வார்த்தைகள் தாண்டிய நன்றிகளோடு…

 

பிரியமுடன்…
பிரியன்…

 

 

7 Responses to படைப்புகள் பற்றி

  1. atlantisgoldensparrow சொல்கிறார்:

    Urchagam tharum nanbargal pattiyalin oru moolaiyil irundhu…..
    Vaazhthukkal 🙂

  2. Madhu Mathi சொல்கிறார்:

    (எல்லா பாடலாசிரியர்களும் கவிஞர்கள்தான் !
    ஆனால் எல்லா கவிஞர்களும் பாடலாசிரியர்கள் அல்ல)

    இதுதான் உண்மை இதில் யாரும் முரண்படுவதில் அர்த்தமில்லை..

    ஆம்
    தமிழைத் தாண்டி, இலக்கியங்களைத் தாண்டி, கவிதைகளைத் தாண்டி ஏதோ ஒன்று நிச்சயமாய் பாடலாசிரியனுக்கு வசப்பட்டிருக்கிறது…

    வாழ்த்துக்கள் தோழர்..

  3. Jothi Basu சொல்கிறார்:

    தமிழ் மொழியாய் தோன்றும் கவிஞர்க்கு
    தமிழ் தமிழாய் தோன்றும் பாவலர்க்கு

  4. Sivanantham Raju சொல்கிறார்:

    அருமையான தகவல்…. நன்றி…

பின்னூட்டமொன்றை இடுக