நடை…

ஜனவரி 10, 2011

 

நடப்பது என்னவென்றே புரியாமல்
நடந்துகொண்டிருக்கிறேன்..

என்னை உரசியபடி 
நீ நடந்து வந்துகொண்டிருப்பதால்..

.


புரிதல்…

ஜனவரி 1, 2011

 

சாவி கொடுத்தால் சொன்னதைச் செய்யும்
பொம்மைப் பறவையோடு
விளையாடிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு  மகள்..

தூரத்தில் கைக் காட்டி 
“அப்பா அது மட்டும் நான் சொல்றத கேக்க மாட்டேங்குது..”
எனச் சொல்லும் போது எப்படி புரிய வைப்பது
அது நிஜப் பறவை என்பதை !

.