சாலை விதி…

நவம்பர் 28, 2010

 

புறவழிச்சாலையின் புடனியை மிதித்தபடி 
பறந்து கொண்டிருக்கும் வாகனக் குவியல்களில்.. 

சற்று முன் கடந்த   ஏதோ ஒரு வாகனம் 
நடு வழியில் சிதறி விட்டிருந்த 
அரிசி மணிகளை தின்பதற்காய் 
ஆசையோடு ஓடி வந்த
ஆட்டுக்குட்டி அறிந்திருக்கவில்லை..

அடுத்த நொடி
அது அடிபடப் போவது 
அரிசி ஏற்றி வரும் வண்டியில்தான் என்பதை..

.


இன்று… – 22/11/2010

நவம்பர் 22, 2010
.
அடியேன் எழுதிய நான்கு பாடல்களோடு இன்று “செய்வது சரியே” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..
.

அவரவர் வேலை…

நவம்பர் 15, 2010

 

பழங்களுக்குள் விதைகளை
அடைத்து வைப்பது மட்டும்தான்
அவனது வேலை..

மண்ணில் விழுந்ததும்
முட்டி முளைத்து
வேர்விட்டு கிளை பரப்பி
நின்று செழிப்பது
விதையின் வேலை..

.


இன்று – 05/11/2010

நவம்பர் 5, 2010

 

.

உத்தம புத்திரன் திரைப்பட வெளியீடு…

எனது இரண்டு பாடல்களோடு இன்று உத்தம புத்திரன் திரைப்படம் வெளியீடு…

.


வதை செய் வன்புணர்வை…

நவம்பர் 1, 2010

புணர்ச்சி என்பது 
உடல் கரைந்து உயிர் நிறைந்து திளைக்கும் 
புனித உணர்ச்சி..

இரண்டு மனங்கள் இணைந்த அன்பின் 
உச்சகட்ட கிளர்ச்சி..

காட்டு வெள்ளமாயினும்
பள்ளம் நோக்கித்தான் பாயும்..

மிருகங்கள் கூட
துணை நிலை கண்டே புணரும்.. 

வெள்ளைத்துளி கொட்ட 
விரிசல் கிடைத்தால் போதுமென்றலையும்  
இச்சை வெறிகளின்
விந்துப் பை பிய்த்தெடுப்போம்..

பிஞ்சுப் பிள்ளைகளை 
பிளந்து தின்னத் துடிக்கும்
காமப் பேய்களின்
உயிர்க் குறியை அறுத்தெறிவோம்..

குழந்தைகளிடம் கடவுளைக் காணாமல் 
கலவி காணத் துடிக்கும் 
அசுத்தக் கண்களை
ஆயிரம் துண்டுகளாய் கிழித்தெடுப்போம்..

வதை செய்து வன்புணர்வை
வேரோடு எடுத்தெரிப்போம்..

மலரட்டும் மனிதநேயம்..
மணக்கட்டும் பிள்ளைப் பாசம்..

.

கோவையில் கொடியவர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு இறந்த  பதினோரு வயது பெண் குழந்தை முஸ்கினுக்கும்.. அவள் தம்பி எட்டு  வயது ரித்திக்கிற்க்கும் சமர்ப்பணம்..

.