சூரியப்பூ….

மார்ச் 2, 2012

 

 

எதிர் திசையில் நீ வருகிறாய்

சூரியனை பின்னால் வைத்துக்கொண்டு..

 

உனது பிம்பம் எங்கும் நிறைந்து வழிந்து

சின்னதாய் சிதறி ஜொலிக்கின்றன

இளங்கதிர்கள்

அந்த மென் காலை வேளையில்..

 

அசைந்து வருகிறாயா மிதந்து வருகிறாயா

உறுதியாய் சொல்ல முடியாத

ஒரு காட்சிக் குழப்பம் அது..

 

பக்கம் வர வர

பசுமை கூடி பச்சையம் கூடி

பல வண்ணங்களில் பூக்கின்றன

என் தோட்டப் பூக்கள்..

 

வருவது நிஜமா என

ஒரு சின்ன மின்னல்

நெஞ்சில் வெட்டி மறைய..

 

கிள்ளிக் கொண்டேன் என்னையே..

நிஜமான அந்த வலி

சுகமானதாய் இருந்தது..

 

நீ நெருங்க நெருங்க

உனக்குப் பின் இருக்கும் சூரியன்

உயரே உயரே சென்று கொண்டு இருக்கிறான்..

 

உனக்காய் நானும் எனக்காய் நீயுமென

புரிந்த புரிதலில்..

எதுவும் பேசாமல் உச்சத்தில் இருந்து

உன்னையும் என்னையும் பார்த்து

சில்லென சிரித்தபடி..