வீரிய விதை..

வீரிய விதை..

கொன்றுத் தீர்ப்பது என
முடிவெடுத்த பிறகு..
குழந்தைகள் என்ன..
பெண்கள் என்ன..
பெரியவர்கள் என்ன..

மொத்தம் அழிப்பது என
துணிந்துவிட்ட பிறகு..
பூக்காடு என்ன..
முட்காடு என்ன..
பறவைக் கூடு என்ன..

கூறு போட்டு.. கூட்டம் கூட்டி..
திட்டமிட்ட.. எண்ணப்படி..
மிச்சமின்றி உங்களால்..
ஒட்டுமொத்தம் தேடித்தேடி..
வேரறுத்தல் நடக்கும்.. – இந்த
சகமழித்தல் பலிக்கும்..

மொத்தத்தையும் அழித்தாலும்..
மீதமின்றி முடித்தாலும்..
அணுவணுவாய் சிதைத்தாலும்..
அத்தனையும் புதைத்தாலும்..

ஒன்று மட்டும் நிச்சயம்..
ஒன்று மட்டும் நிச்சயம்..

எவ்விதமோ.. எப்படியோ..
எவ்விடமோ.. எக்கணமோ..
வீரியத்தை சுயத்தில் கொண்ட..
விடுதலையை உயிர்ப்பில் கொண்ட..

விதை வெடித்து முளைக்கும்..
விருட்சமென நிலைக்கும்..

களைகள் யாவும் மரிக்கும்..
மீண்டும் பூமி சிரிக்கும்..

( பாலச்சந்திரனின் ஆத்மாவுக்கும்…
பாவிகளின் கர்மாவிற்க்கும்… )

4 Responses to வீரிய விதை..

  1. வணக்கம்
    பிரியன்
    அருமையான கவிதை உருக்கமான வரிகள் ஒவ்வொரு வரியிலும் அனல் பறக்கும் வார்தைகள் வாசிக்கும் நெஞ்சங்களில் உறங்கி கிடக்கும் உணர்வுகளை தட்டி எழுப்புகிறது அண்ணா உங்கள் பணி சிறப்படைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  2. piriyan சொல்கிறார்:

    வணக்கம் ரூபன்

    தங்கள் அன்பிற்க்கும்.. பதிவிற்க்கும் நன்றிகள்.. 🙂

  3. Arumugam V. Muthu Samy சொல்கிறார்:

    அருமையான வரிகள். பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விதம் கொடூரமானதும், கேவலமானதும் ஆகும். கொன்ற மிருகத்துக்கு ராணுவ சீருடை ஒரு கேடு.

  4. piriyan சொல்கிறார்:

    விரைவில் விடியல் வருமென நம்புவோம் ஆறுமுகம்

piriyan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி