எழுத்தறிவித்தவர்…

 
பால்வாடியில் மழலைக்காலம் பிறந்து
நடுநிலைப் பள்ளியில் பிள்ளைக்காலம் தொடர்ந்து  
மேல்நிலைப் பள்ளியில் பருவகாலம் நகர்ந்து
கல்லூரிகளில் வாலிபக் காலம் வளர்ந்து…

 

இன்றைக்கும் முதல் பாதி வாழ்வில்
முழுதாய் நிறைந்திருக்கிறது
மறக்கமுடியாத எனது படிப்புக்காலங்கள்…

 

ஆசிரியர்களோடும் ஆசிரியைகளோடும்
நண்பர்களோடும் நண்பிகளோடும்
மறக்க முடியா நினைவுகளாய்
இன்றும் உதிரத்தில் கலந்திருக்கின்றன…

 

எனது வால் தனங்களும்
சின்னச் சின்ன சண்டைகளும்
செல்ல சேட்டைகளும்
வம்புகளும் குறும்புகளும்…

 

அன்று அத்தனை பேருக்கு முன்னால்
அடித்துவிட்ட ஆசிரியரின் சட்டையில்
அவருக்குத் தெரியாமல்
பேனா மை தெளித்ததற்க்காக
இன்று வருந்தி பயனில்லை… 

 

தெரியாத கேள்விகளை கேட்டு
சொல்லாத பதிலுக்காக
திட்டி விட்டதற்காய்
அந்த ஆசிரியையின் கைப்பைக்குள்
தவளையைப் பிடித்துப் போட்டதும்…

 

அதற்குள் கைவிட்டு
அவர் பயந்து அலறியதும்
அன்றைக்கு சந்தோசமாய் இருந்தாலும்
ஏனோ இன்று ரசிக்கும்படியாக இல்லை…

 

அன்று நான் உயர உழைத்தவர்கள்
இன்றும் அப்படியேதான் இருக்கிறார்கள்
எல்லோருக்குமான ஏணிகளாய்…

 

எப்பொழுதாவது எதிரில்
அவர்களை காண நேரும்பொழுது
இப்பொழுது வளர்ந்துவிட்ட நான்
அன்று இன்னவன் என
என்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் பொழுதில்
மீண்டும் போய்விடுகிறேன் அந்த காலங்களுக்கு…

 

சில சமயங்களில்
இந்த வளர்ந்த உருவத்தில் இருந்து
தனது பழைய மாணவனை
தெரிந்துகொண்டுவிடும்
அவர்களது முகத்தில்…
 

என்னை இப்படி கண்டுவிட்ட மகிழ்ச்சியில்
மிளிரும் ஒரு சாதனை புன்னகை இருக்கிறதே
அதற்கு இணை ஏதுமில்லை இந்த உலகில்…

 

படிப்பறிவில்லாதவன் ஐந்து அறிவுக்கு சமம்…
எனது ஆறாவது அறிவை எழுப்பிய ஆத்மாக்களே  
வாழ்க பல்லாண்டு…

 

எழுத்தறிவித்தவன் இறைவன்…
எடுத்தறிவித்தவன் மாணவன் !

 

 

 

 

.

அனைத்து அன்றைய இன்றைய நாளைய மாணவ மாணவிகளுக்கும்…

ஆதிபகவ ஆசிரியர்களுக்கும் ஆசிரியைகளுக்கும்…

இந்த பிரியமான மாணவனின் ஆசிரியர்தின நல்வாழ்த்துக்கள் !

Advertisements

One Response to எழுத்தறிவித்தவர்…

  1. preethikumaravel சொல்கிறார்:

    இதுல சொன்ன சேட்டையெல்லாம் நீங்க பண்ணதா.

    நல்லா இருக்கு, எனக்கு பழைய நியாபகங்கள் வந்துடுச்சு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: