பிள்ளையாருக்கு பிறந்தநாள் பரிசு…

 

குண்டு குண்டு கொழுக்கட்டைகளும் 
சுண்டெலியும் இருந்த காலம்போய்
கம்ப்யுட்டரும் கைப்பேசியும்
வைத்துக்கொண்டு…

 

தெருவோரங்களை மடக்கி…
அவரவர் வசதிக்கேற்ப
ஆஜானுபாகுவாய்…

 

தனது பிறந்த நாளுக்காக
புதிதாய் வந்து
ஓய்யாரமாய் அமர்ந்திருக்கிறார்
பார்க்கும் இடங்களில் எல்லாம்
எங்கள் பிள்ளையார் !

 

கல் பிள்ளையாரைப்போல 
நீண்டநாள் வாழ்வு இல்லை என்றாலும்…

இருக்கும் கொஞ்ச நாட்களும் 
கொண்டாட்டம்தான் இவருக்கு…

 

படையலுக்காக வைத்த
சூடான கொழுக்கட்டைகளை
பசித்த குழந்தைகள்  
புசிக்க கேட்டதற்காய்  
வேண்டா வெறுப்போடு விரட்டிவிட்டு…

பக்கத்துத் தெரு பெண்கள்
வேண்டாம் வேண்டாமென்றாலும்
பார்த்துப் பார்த்து கொடுக்கும்
பக்தி மிக்க இளைஞர்கள்  !

 

தெருவையே வளைத்து
ஆடும்வரை ஆடி…
ஊர்வல நாளன்று வீதிகளை எல்லாம் அலப்பி…
கூச்சலிட்டு…

 

யாருடைய விநாயகருக்கு கூட்டம் அதிகமென
வெட்டிச் சண்டையிட்டு…

தனது பலம் நிரூபிக்க
பட்டையைக் கிளப்பி வரும் கூட்டம்…

 

வீட்டுக்கு வீடு வசூலித்த
அத்தனை காசுபணத்தையும்…

வெற்றுப் பெருமைக்காய் செய்த
அத்தனை ஆடம்பர செலவுகளையும் தாங்கி…

கடைசியில் ஒன்றுமே இல்லாமல்
கரைந்துபோகிறார் எங்கள் பிள்ளையார் !

 

நம்மைச் சுற்றி பலபேர்
பசியால் வறுமையால்
உதவிகளின்றி வாட…

 

அதை விட்டு…
தன்னைச் சுற்றி சிலபேர்
வெட்டிக்கூத்தாடி செய்யும் வேண்டுதல்களை
நிச்சயம் விநாயகர் 
ஏற்றுக்கொள்வதில்லை என்பதை
இவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை…

 

கிணறுகளிலும் குளங்களிலும்
குட்டைகளிலும் நதிகளிலும்
கடல்களிலும்…

 

ஏற்கனவே பலநூறு விநாயகர் சிலைகள்
கரைந்தும் கரையாமல்
முட்டி மோதிக்கொண்டு 
இடத்தை அடைத்துக்கொண்டு கிடப்பதால்…

 

இனியாவது அதற்கான செலவுகளை
அன்பாக கொடுங்கள்
அநாதை ஆசிரமங்களுக்கும்
ஆதரவற்றவர்களுக்கும்…

 

அதைத்தானப்பா தனது 
பிறந்தநாள் பரிசாய்
கேட்கிறார் நமது பிள்ளையார் !

 

 

 

 

.

எனக்கு விநாயகர் சதுர்த்தியின் மீது எந்த தனிப்பட்ட கருத்தும் இல்லை…

இது உண்மையை விளக்கும் கவிதையின் கரு அவ்வளவே…

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களோடு…

பிரியமுடன்…
பிரியன்…

Advertisements

3 Responses to பிள்ளையாருக்கு பிறந்தநாள் பரிசு…

 1. அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் பிரியன். சமீபத்தில் கடலில் மூழ்கடிப்பட்டு பின்பு அலங்கோல நிலைகளில் கரையொதுங்கும் பிள்ளையார் சிலைகளை காணம் போது மனம் வலித்தது.

  பக்தியின் பெயரால் பலர் அடிக்கும் லூட்டிகள் தாங்கவில்லை

 2. piriyan சொல்கிறார்:

  உண்மை நண்பரே…

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்…

 3. preethikumaravel சொல்கிறார்:

  பிள்ளையாருகேத்த பிறந்தநாள் பரிசுதான் இது !

  ஒருத்தராவது திருந்துனா சரி .

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: