விடைகளில்லா கேள்விகள்…

 

காய்ச்சிய இரும்பைப்போல் கருவிழிகளுக்குள்  
நுழைந்து செல்லும் பார்வைகளை 
எங்கிருந்து எடுத்து வந்தாய் ?

 

மற்றவர்களைப் பார்ப்பதற்கும்
என்னைப் பார்ப்பதர்க்குமென
தனித்தனி பார்வைகளை
எப்படி நீ திரட்டி வைத்தாய் ?

 

தூரத்தில் நான் வரும்பொழுதே
விழியோரத்தில் பார்த்துவிட்டு
“ஹாய் எப்ப வந்த…” என
எதுவுமே தெரியாததுபோல் கேட்க 
எப்பொழுது நீ கற்றுக்கொண்டாய் ?

 

எதுவும் பேசாமல்
உன்னையே உற்றுப் பார்க்கும்
என்னை நீ மெல்லக் கிள்ளி
“சீ போடா…” எனச் சொல்ல
எங்கிருந்து வெட்கம் எடுத்தாய் ?

 

கேள்விமேல் கேள்விகள் கேட்டு
நானும் உன்னை நச்சரிக்க
“எல்லாம் உன்னாலதான்…” என்று
என் மார்பில் புதைந்துகொண்டாய் !

Advertisements

2 Responses to விடைகளில்லா கேள்விகள்…

 1. jananielamurugan சொல்கிறார்:

  “மற்றவர்களைப் பார்ப்பதற்கும்
  என்னைப் பார்ப்பதர்க்குமென
  தனித்தனி பார்வைகளை
  எப்படி நீ திரட்டி வைத்தாய் ?”

  எனக்கு பிடித்த வரிகள்…
  வார்த்தைகளை விட ..பார்வைகள் நிறைய சொல்லும் 🙂

 2. piriyan சொல்கிறார்:

  உண்மை தோழி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: