இரவல் கனவுகள்…

 
கஞ்சாச் செடிபோல
இழுக்க இழுக்க போதைதரும்
உன் பெண் வாசத்தில்
கட்டுண்டு போனது
என் ஒட்டுமொத்த ஆணவமும்  !

 

பேர் தெரியாத
இதற்குமுன் அறிந்திராத முகர்ந்திராத 
காட்டுப்பூக்களைப்போல 
விதவிதமாய் மலர்ந்து சிரிக்கும்
உன் வண்ணப் புன்னகைகளை
நிரப்பி அலைகிறது என் ஞாபகம்   !

 

யாருமற்ற ஒத்தையடிப் பாதைகளாய்
வளைந்து நெளியும்
உன் உள்ளங்கை ரேகைகளுக்குள்
சத்தமின்றி தனிமையில்
பயணிக்கிறது என் இதயம் !

 

உன்னை எதிரில் காணுகிற
வேளைகளில் எல்லாம்
சிறகுகள் முளைத்துவிடுகிறது
என் இமைகளுக்கு !

 

நதியில் நகர்கின்ற படகைப்போல்
உன் அழகில் மெதுவாய்
மிதந்தபடி இருக்கின்றன..
எனது இரவுகளுக்காக
உன்னிடம் நான் 
கடன் வாங்கி வைத்திருக்கும்
இரவல் கனவுகள் !

Advertisements

2 Responses to இரவல் கனவுகள்…

 1. jananielamurugan சொல்கிறார்:

  உன்னை எதிரில் காணுகிற
  வேளைகளில் எல்லாம்
  சிறகுகள் முளைத்துவிடுகிறது
  என் இமைகளுக்கு !

  அனுபமா sir?
  நல்ல வரிகள் !

 2. piriyan சொல்கிறார்:

  நன்றி தோழி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: