என்ன சுதந்திரம்…

 

பக்கத்து வீட்டு வேப்பமரக்கிளை
தினமும் தன் வீட்டில்
இலைகள் உதிர்ப்பதற்க்காய்
மரத்தையே வெட்டச் சொல்லி
தெலுங்கு குடும்பத்துடன் சண்டையிட்டு…

 

எதிர் வீட்டு மலையாளிப் பெண்ணும்
அடுத்தத் தெரு கன்னடப் பையனும்
நட்பாய் இருப்பதை
நாலுபேரிடம் கொச்சைப்படுத்தி…

 

புட்டு விற்கும் பாட்டியம்மாவிடம்
மூன்று ரூபாய்க்கு பேரம்பேசி
முன்னூறு ரூபாய் பிட்சா வாங்கி
தின்னமுடியாமல் வீணாக்கி…

 

சாலை சிக்னல்களில் நிற்காமல்…
ஒன்-வேயில் ஹெல்மெட் இல்லாமல்
திரிபில்ஸ் போய்…

நோ பார்க்கிங்கில் வண்டி நிறுத்தி…

 

ஹிந்து சாமியார்களை காமவாதிகளாக்கி…
கிருஸ்தவர்கள் மதம் மாற்ற முயற்சிப்பவர்கள் எனச்சொல்லி…
முஸ்லிம்களா ஐயோ தீவிரவாதிகள் என கதைகட்டி…

 

லஞ்சம் கொடுத்து வேலை வாங்கி…
அங்கும் இங்கும் போட்டுக் கொடுத்து…

 

கடன் கொடுத்தவன் செத்தால் சந்தோசப்பட்டு…

புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போட்டு…

இஷ்டத்திற்கு பொய்கள் அவிழ்த்து…

கடுகை மலையாக்கி…
மலையை கடுகாக்கி…

தொட்டதுக்கெல்லாம் வியாக்கியானம் பேசி…

எல்லாரையும் குறை கூறி…
எதற்க்கெடுத்தாலும் சலித்து…

 

இறுதியாக டீக்கடை பெஞ்சில்…

“என்ன சுதந்திரம் வாங்கி என்னப்பா புண்ணியம்…
நாடு ரொம்ப கேட்டுப் போச்சு !!!!” என
சத்தம் போட்டு பேசி கலைந்து செல்வான்
நம் இந்தியக் குடிமகன்
சங்கடம் ஏதுமின்றி…
கொஞ்சம்கூட கூச்சமின்றி…

 

 

 

 

 

 

தாய் மண்ணில் தமிழ் மண்ணில் பிறந்த ஒவ்வொரு பிரியமான இதயத்திற்கும் பிரியனின் இனிய சுதந்திரநாள் நல்வாழ்த்துக்கள் !

வாழ்க பாரதம் ! வெல்க சமுதாயம் !
வாழ்க தமிழ் ! வளர்க புகழ் !

Advertisements

5 Responses to என்ன சுதந்திரம்…

 1. pambaisathya சொல்கிறார்:

  good

 2. piriyan சொல்கிறார்:

  நன்றி நண்பரே…

 3. jananielamurugan சொல்கிறார்:

  Good perception !!!
  எல்லாவற்றையும் குற்றம் சொல்பவர்களுக்கு ……………

 4. piriyan சொல்கிறார்:

  சில சூழ்நிலைகளில் நாமும் அதற்குள் அடங்குபவர்கள்தான் அல்லவா…

  தங்கள் கருத்துக்கு நன்றி தோழி…

 5. preethikumaravel சொல்கிறார்:

  பிரமாதம் – சாட்டையடி !

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: