நீ எப்பொழுதும் இப்படித்தான்…

 

மெல்லிய காற்று
மெதுவாக பூக்களை திறப்பதைப்போல
ரகசிய முத்தங்கள் வைத்து
என் ஆசைகளை திறந்துவிடுவாய் !

 

வெள்ளைப் பனித்துளியை
மெல்ல உறிஞ்சும் சூரியன்போல
மௌனத்தை முகத்தில் பூசி
என் வார்த்தைகளை
திருடிச் செல்வாய் !

 

ஈர மரக்கிளை மெதுவாய்
இலைகளை அவிழ்ப்பதுபோல
உன் விரல்களால்
என் உள்ளங்கைக்குள் பயணித்து
வெட்கங்களை விரட்டியடிப்பாய் !

 

சில்லென்ற காற்றுப் பட்டு
சீக்கிரம் விழிப்பதைப்போல
சட்டென்று கையைவிட்டு
தூரத்தில் தள்ளி நிற்பாய் !

 

சூடான நெருப்புப்பொறி
தேகத்தில் விழுந்ததைப்போல
விலகுதல் தாங்காமல்
மீண்டும்வந்து கட்டிக்கொள்வாய் !

 

அத்தனையும் பார்த்தபடி
அசையாது நின்றிருக்கும்
ஆளுயரக் கண்ணாடிதான்
காட்டிக்கொடுக்கும்
ஐயோ உன் குறும்புகளை…

 

எனக்குத் தெரியும்
நீ எப்பொழுதும் இப்படித்தான்…

Advertisements

2 Responses to நீ எப்பொழுதும் இப்படித்தான்…

 1. jananielamurugan சொல்கிறார்:

  எனக்குத் தெரியும்
  நீ எப்பொழுதும் இப்படித்தான்…

  எப்படி தான் ?;-)

 2. piriyan சொல்கிறார்:

  இந்த கவிதைகளாய் இதோ இப்படித்தான்…

  நன்றி தோழி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: