வணக்கம்…
நிறைய இதயங்கள் செக்சி லேடி பாடலின் இணைப்பை வேண்டியுள்ளதால் இத்தோடு அதன் வீடியோ இணைப்பை அளிக்கிறேன்…
http://www.youtube.com/watch?v=zDdaAq5CsOA/
பிரியமுடன்…
பிரியன்…
.
வணக்கம்…
நிறைய இதயங்கள் செக்சி லேடி பாடலின் இணைப்பை வேண்டியுள்ளதால் இத்தோடு அதன் வீடியோ இணைப்பை அளிக்கிறேன்…
http://www.youtube.com/watch?v=zDdaAq5CsOA/
பிரியமுடன்…
பிரியன்…
.

“நினைத்தாலே இனிக்கும்” படத்தில் அடியேன் எழுதிய “செக்சி லேடி..” பாடலைப் பற்றி வேட்டைக்காரன் இசை வெளியீட்டு விழாவில் புகழ்ந்து பேசிய பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு என் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்…
.

“நினைத்தாலே இனிக்கும்” படத்தில் அடியேன் எழுதிய “செக்சி லேடி” பாடல்.. அனைவரின் அங்கீகாரம் மூலம் என்னை இன்னும் கொஞ்சம் உயரம் ஏற்றி இருக்கிறது…
இந்த வெற்றிக்கு பொறுப்பாய்…
நல்ல மெட்டமைத்துக் கொடுத்த என் மனதுக்கு பிடித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களுக்கும்..
சிறப்பாய் இயக்கிய இயக்குனர் குமாரவேல் அவர்களுக்கும்..
தரமாய் தயாரித்த ஜெமினி சர்கியூட் நிறுவனத்திற்கும்..
சகம் முழுக்க கொண்டு சேர்த்த சன் பிக்சர்ஸுக்கும்,
நண்பர்களுக்கும்.. ரசிகர்களுக்கும்.. ரசிகைகளுக்கும்..
பிரியமான அனைவருக்கும் என் வார்த்தைகள் தாண்டிய நன்றிகளோடு…
பிரியமுடன்…
பிரியன்…
.

அத்தனை பேரையும் தன் தனித்துவ எழுத்தால் கட்டிப் போட்டிருக்கும் ஆனந்த விகடன் தனது சிறப்பு இதழான தீபாவளி மலரில் எனது “நீ என் தீபாவளி…” கவிதையை வெளியிட்டமைக்கான மனமார்ந்த நன்றிகளோடு…
பிரியமுடன்…
பிரியன்…
.

வீரசேகரன் இசை வெளியீடு…
சதிஷ்குமார் இயக்கத்தில், என் பிரியமான இசையமைப்பாளர் சாஜன் மாதவ் இசையில், எனது இரண்டு பாடல்களோடு இன்று வீரசேகரன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு !

இசையமைப்பாளாராய் உங்கள் முதல் படம் வீரசேகரனின் இசை வெளியீடு..
முதல் முயற்சி முழு வெற்றியடைய வாழ்த்துக்கள்…

இசை – கவி என்ற அடையாளத்தோடு பல வருடங்களுக்கு முன் துவங்கிய நமது நட்பு.. இன்று.. குடும்பத்தில் ஒருவர் போல.. அண்ணன் தம்பி போல.. உயர்ந்துவிட்டதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.. உங்களுக்கும்தான்..
மலையாள திரையிசை சரித்திரத்தில் தனது பெயரை அழுத்தப் பதிவு செய்த தங்கள் அப்பா ரவீந்திரன் அவர்களின் ஆசிர்வாதம் தங்களை உயரம் செல்ல வழிநடத்தட்டும்…
எனது ஆரம்ப நாட்களில் இருந்து எனது வளர்ச்சியை அறிந்து.. என்றும் என் பலமாய் இருந்து வரும் உங்களின் இந்த இசைப் பயணத்தில்.. அடியேன் இருப்பேன் உங்களுக்கான வழித்துணையாய் என்றும்…
பிரியமுடன்…
பிரியன்…
.

விஜய் ஆண்டனி இசையில், சன் பிக்சர்ஸ் வெளியீட்டில், எனது “செக்சி லேடி…” பாடலோடு “நினைத்தாலே இனிக்கும்” படம் வெளியீடு…
.

விஜய் ஆண்டனி இசையில், கலைஞானி கமலஹாசன் தலைமையில், எனது “செக்சி லேடி…” பாடலோடு “நினைத்தாலே இனிக்கும்” படத்தின் இசை வெளியீடு…
.
இதற்குமேல் என்னால் அடைத்து வைக்க முடியாது…..
நானே தடுத்தாலும் என் கவிதைகள் இனியும் நிற்காது…..
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த குடிகளின் புதல்வர்கள்..
கஞ்சிக்கு வழியின்றி.. அடிப்படை மனித உரிமைகள் கூட கிடைக்காமல்..
அகதிகளாய் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் அவலங்களை…
இன்னும் உரக்க.. இன்னும் இன்னும் உரக்க..
உலகை உலுக்க.. சொல்லித்தான் தீரவேண்டும்…
எந்த பாவமும் செய்யாமல்.. தமிழர்களாய் பிறந்ததற்காய்..
அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு.. அநாதைகளாகி அழிந்துவரும்..
எம் இலங்கைத் தமிழருக்கு…….
என்னும் தலைப்புகளில் பின்வரும் இந்த 7 கவிதைகளை
மனது நிறைய வலியோடு சமர்ப்பிக்கிறேன்……
விரைவில் அவர்களுக்கு விடியல் வரும் எனும் நம்பிக்கையோடு…
பிரியமுடன்…
பிரியன்…
.
ஊரக்கூட்டி சோறு போட்ட
வம்சம் இப்ப வாய மூடி
சோத்துக்காக நிக்கிதிங்க பசியோட வரிசையில..
பதிமூணு பிள்ள பெத்து
அத்தனையும் கண்ணு முன்னால்
பீரங்கிக்குண்டு பட்டு துண்டு துண்டா செதறிப்போக
அனாதையான தாய் கெழவி கிடக்குதிங்க மூலையில…
மனசு நிறைய பாசம் வைச்சு
வாழ்வாங்கு வாழ்ந்த கூட்டம்
திக்குத் தெச தெரியாம திரியுதுங்க அகதிகளா…
அடுத்த மூச்சுக் காத்திழுக்க
இருப்போமா தெரியாது..
அடுப்பெறகா எரிச்சாலும்
கேட்க நாதி கிடையாது..
எவ்வளவுதான் சொன்னாலும்
எங்க வலி புரியாது..
ஒரு நிமிஷம்கூட எங்க வாழ்வ
நீங்க யாரும் வாழ முடியாது….