கருவறையை நிரப்பாத கற்புத்தாய்.. – நீ
உலகெங்கும் கருணையை கற்பித்தாய்..
கண்களிலே கனிவு கொண்ட கன்னித்தாய்.. – உன்
புன்னகையால் பூமியை நீ புதுப்பித்தாய்..
உள்ளமெல்லாம் உயர்வு கொண்ட வெள்ளைத்தாய்.. – உன்னை
கடிந்து கொண்ட மனங்களையும் மன்னித்தாய்..
நெஞ்செல்லாம் அன்பையே விதைத்தாய்..
நலிந்தோர் நல்வாழ்விற்கு உழைத்தாய்..
ஓயாது சேவை செய்து இளைத்தாய்..
தொண்டு எனும் தூய அருள் வளர்த்தாய்..
எப்போதும் ஏழை துயர் துடைத்தாய்..
எங்கு கண்ணீரைக் கண்டாலும் துடித்தாய்..
சாமி உள்ளம் கொண்டு.. – நீ
சரித்திரத்தில் நிலைத்தாய்..
இந்த பூமி உள்ள காலம் வரை.. - நீ
ஒருத்திதான் எங்கள் தெய்வத்தாய்..
அழகே.. அமுதே.. அன்னை தெரசா..
உனக்கு முன் இந்த உலகம் என்ன பெருசா…
.
ஆகஸ்ட் 26
அன்னையே.. இது நீ பிறந்த தினம் மட்டுமல்ல..
கருணை பிறந்த தினம்.. காதல் பிறந்த தினம்..
அந்த கடவுள் பிறந்த தினம்….
.
ப்ரியன்!……தாய்….ய்……மிக அருமையாக வந்துள்ளது. பாராட்டுகள்…
கோவை கவிக்கு நன்றிகள்….
அன்னைக்கு அருமையான சமர்பபணம்
நன்றி…