ஞானம்…

 

வழக்கமாய் சென்றமரும்
பழக்கமான குளத்துக் கரையில்
நெடுநேரம் மௌனமாய்
அமர்ந்திருந்த அந்தக் கணத்தில்..

 

நீருக்கும் எனக்கும் இடையில்
யாருமில்லை என்று
மனதுக்குள் எண்ணிக் கொண்டிருந்த பொழுது..

 

சட்டென வளைந்து நெளிந்து வந்த
அந்த அழகிய அலைகள் 
புத்திக்கு உணர்த்திச் சென்றது..

 

நீருக்கும் எனக்கும் இடையில்
காற்று இருக்கும் உண்மையை…

 

.

ஒரு பதில் “ஞானம்…” க்கு;

  1. ilakkiya சொல்வதென்னவென்றால்:

    hai priyan, ur poems are really so good. What are your next projects?

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்