காற்றை மட்டும்
கடித்துத் தின்ன முடிந்தால்..
யாருக்கும் இருக்காது பசி !
கடலை மட்டும்
அள்ளிக் குடிக்க முடிந்தால்..
யாருக்கும் இருக்காது தாகம் !
தேவைகளை மட்டும்
தீர்க்க முடிந்தால்..
யாருக்கும் இருக்காது தேடல் !
இன்பம் மட்டுமே
வாழ்வாகிப் போனால்
கொஞ்ச நாளில்
இன்பமாய் இருப்பதே
துன்பமாகக் கூடும்…
வெயிலும் மழையும்..
இரவும் பகலும்..
கதிரும் நிலவும்..
ஆணும் பெண்ணும்..
தீயும் நீரும்..
சந்தோஷமும் சோகமும்..
புன்னகையும் அழுகையும்..
ஒரு அர்த்தத்தொடே படைக்கப்பட்டிருக்கின்றன…
அதனால் எதற்க்கும் முரண்படாது
எளிதாய் ஏற்றுக்கொள்வோம்
அதனை அதன் வழியில்…
12:58 மு.பகல் இல் ஜனவரி 30, 2009 |
ஆம் பிரியன்… வாழ்க்கையை வளைக்க முயலும் போது தான் வலிகள் பிறக்கின்றன… ஆதலின் ஏற்றுக் கொள்வோம் வாழ்வை அதன் போக்கில்…
நட்புடன் சத்யா…
http://www.nodigal.blogspot.com
2:36 மு.பகல் இல் மே 29, 2009 |
வாழ்க்கை மிகவும் இனிமையானது..
அதை அதன் வழியிலேயே வாழ்வோம்..
ஆனால்,
வலிகள் இல்லையெனில் வாழ்வு அர்த்தமற்றது…
எனவே வலிகளையும் ஏற்றுக்கொள்வோம்..
வாழ்வைப்போலவே..