சரியான பிழை…

 

சுவாரஸ்யமாக என்னுடன் நீ
பேசிக்கொண்டிருக்கும் வேளையில்…

 

சட்டென ஏதும்
வார்த்தைப் பிழை நேர்ந்தால்…

 

மென்மையாய் நுனி உதட்டை கடித்தபடி…
மெதுவாய் தலையில் தட்டிக்கொள்வாய்…

 

பின் மீண்டும் சுவாரஸ்யமாகும்  
பேச்சுக்கிடையில்…

 

அடுத்து வரப்போகும்
உன் செல்லப் பிழைகளுக்காகவே
ஆவலுடன் காத்திருப்பேன் நான் !

ஒரு பதில் “சரியான பிழை…” க்கு;

  1. preethikumaravel சொல்வதென்னவென்றால்:

    good
    beautiful thoughts priyan

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்