கரைந்த நிமிடங்கள்…

 

நாள் முழுக்க பேசிக்கொண்டு 
பக்கத்திலேயே இருந்த பிறகும்
விடைபெறும் சமயத்தில் 
என் கைகைளை இறுகப் பற்றிக்கொள்வாயே…

 

அந்த ஒருநொடியில் 
ஒட்டுமொத்தமாய் கரைந்துபோனது
இதுவரை கடந்த 
அத்தனை நிமிடங்களும் !

 

இன்னும் கொஞ்சநேரம் 
இப்படியே கையை பற்றிக்கொண்டு இருப்பாயா
என மனம் ஏங்கினாலும்…

 

“சரி நேரமாயிடுச்சு கிளம்பட்டுமா… “
என கேட்கும்
என் பொய்யான உதடுகளை என்ன செய்ய !

3 பதில்கள் “கரைந்த நிமிடங்கள்…” க்கு;

  1. sweetkavitha சொல்வதென்னவென்றால்:

    hi priyan !

    karaintha nimidangalil karainthupoiviten,

    kalakkureenga.

    please tell me are u in love….

  2. preethikumaravel சொல்வதென்னவென்றால்:

    preethu here…

    wow… your poems are making me mad…

    this lines mindblowing.

    yor r grt priyan !

  3. kapilashiwaa சொல்வதென்னவென்றால்:

    உங்கள் பாடல்களை கேட்டு இருக்கிறேன். நன்றாக உள்ளது. இன்னும் இன்னும் முடிவில்லா பயணம் செய்ய தயாராகிக் கொள்ளுங்கள் பிரியன். ஏனெனில் நீண்ட எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது. இந்த கவிதையை நான் மிகவும் விரும்பி படித்தேன். நான் படித்த மிகவும் பிடித்தமான கவிதைகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது.

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்