எனது படங்கள் பற்றி

 

.

 

அஞ்சாதே…

தமிழ்த் திரைப்படத்துறையில் எனக்கான அங்கிகாரம் அளித்த படம்…

மிஸ்கின் எனும் நல்ல படைப்பாளியை எனக்கு அறிமுகம் செய்துவைத்த பாடல்…  

 

” மனசுக்குள் மனசுக்குள் புது மழை விழுகிறதே !
முழுதாய் நனைந்தேன் !

கருவிழி இரண்டுமே கருவறை ஆகிறதே !
உனை நான் சுமந்தேன் ! “

 

 

 

 

காதலில் விழுந்தேன்…

விஜய் ஆண்டனி இசையில் படத்தின் முதல் பாடலை எழுதக் கிடைத்த படம்…

நல்ல செய்திகளை ஜாலியாக சொல்லும் பாடல்…

விஜய் ஆண்டனி அவர்கள் இன்றுவரை அழைத்து எனக்கு பாடல்களை தர காரணமாய் இருந்த பாடல்…

 

” புயலாய் புறப்படு
வெடியாய் வெடித்திடு
     உனக்கு தடை இல்லை உலகிலே !

திசைகள் பொடிபட
எதிரி பயப்பட
     உனக்கு மேற்கும் விடியலே… “

 

 
 

 

பந்தயம்…

S.A.சந்திரசேகர் இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில், மென்மையான மெல்லிசைப் பாடலை தந்த படம்…

காதலும் ஒருவகை வன்முறைதான்… மென்மை மட்டும் கொண்டதல்ல காதல்… இந்த கருத்தைக்கொண்ட  பாடல்…

 

 
” தீவிரவாதி தீவிரவாதி காதல் தீவிரவாதி
முத்தச் சூட்டில் என்னை நீ சுட்டுக் கொள்வாயோ !

தீவிரவாதி தீவிரவாதி காதல் தீவிரவாதி
காட்டுத் தீயாய் என்மேல் நீ பற்றிக் கொள்வாயோ ! “

 

 

 

ரசிக்கும் சீமானே… ( எட்டப்பன்… )

ஸ்ரீகாந்த் நடிப்பில் விஜய் ஆண்டனி இசையில் இரண்டு அழகான பாடல்களை எழுத முடிந்த படம்…  மிருதுவான கவித்துவமான வரிகளுக்கு இடம் தந்த மெல்லிசைப் பாடல்கள்…

 

” கோடிக் கோடி மின்னல்கள்
கூடி பெண்மை ஆனதே !

மூடி மூடி வைத்தாலும்
வெளிச்சம் வீசுதே ! “

                                                                         என்ற வரிகளோடும்….

 

” நான் உன்னைப் பார்க்கும் நேரம்
நீ மண்ணைப் பார்ப்பதேனோ !

            உன் கண்ணை உற்றுப் பார்த்தால் சரியோ ! “ 

                                                                    என்ற வரிகளோடும் தொடங்குகின்றன பாடல்கள்…

 

 

௮… ஆ…இ… ஈ…

AVM  நிறுவனத்தின் படம்… சபாபதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் எனது இரண்டு பாடல்கள்  பிறந்த படம்…

 

நமது கிராமியத்தை வரிகளில் சொல்ல முடிந்த ஒரு அழகான மெல்லிசைப் பாடல்…

“ ௮ ஆ இ ஈ சொல்லித் தருதே வானம்
அதில் பட்டாம்பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்… “ 

                                                          என்ற வரிகளோடு தொடங்குகிறது பாடல்…

 

அடுத்து இளைஞர்களுக்கான கொண்டாட்டப் பாடல் ஒன்று…

 

 

 

தநா 07 அல 4777…

GV Films   நிறுவனத்திற்காக இலச்சுமிகாந்தன் இயக்கி, விஜய் ஆண்டனி இசையமைத்து, எனது இரண்டு பாடல்களோடு வெளிவந்த படம்…

 

டிஸ்கொதே கிளப்பில் இரவு நேர கொண்டாட்டப் பாடல் ஒன்று…

” சொர்க்கம் மதுவிலே
சொக்கும் இரவிலே

வாம்மா அருகிலே
நீ காட்டுத் தீப்போலே… “

                                                                   என்ற வரிகளோடு தொடங்குகிறது பாடல்…

 

அடுத்து வாகனத்தின் வேகம் குறித்த பாடல்…

” தேவையில்லை confusion
speed-டும் ஒருவகை meditation… “

                                                                                           என்ற வரிகளோடு தொடங்குகிறது பாடல்…

 

 

 

 

நினைத்தாலே இனிக்கும்…

இரண்டு இமயங்கள் இணைந்த மிகப்பெரிய படத்தின் தலைப்பு…
குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் எழுந்த படம்…

கல்லூரி காலத்து ஹாஸ்டல் வாழ்க்கையின் இரவு நேரங்களை படம் பிடித்து காட்டும் பாடல்…

“ செக்சி லேடி.. கிட்ட வாடி..
போதை பாதி.. ஆசை மீதி.. மோதி மோதி.. “

 

 

இவை சில உதாரணங்கள்… இன்னும் நிறைய 60-க்கும் மேற்ப்பட்ட  படங்கள், 150-க்கும் மேற்பட்ட பாடல்கள்… என மெல்ல மெல்ல எழுந்து கொண்டிருக்கிறேன்…

 

இன்னும் செல்லவேண்டி இருக்கிறது நிறைய தூரம்…
அதற்காய் காத்திருக்கிறது காலம்…

பிரியமுடன்…
பிரியன்…

 

7 பதில்கள் “எனது படங்கள் பற்றி” க்கு;

  1. யாழ்_அகத்தியன் சொல்வதென்னவென்றால்:

    வாழ்த்துக்கள் தொடருங்கள்

    வாய்ப்பு கிடைத்திருகிறது
    இனி வழியா இல்லை

    பாடலாசிரியரான உங்களை
    வலைப்பூவில் சந்தித்ததில்
    சந்தோசம்

    என்றும் தமிழ் வாழனும்

  2. geetalakshmi சொல்வதென்னவென்றால்:

    வாழ்த்துக்கள் தொடருங்கள்

  3. சேவியர் சொல்வதென்னவென்றால்:

    வாழ்த்துக்கள்.. :)

  4. piriyan சொல்வதென்னவென்றால்:

    மிக்க மகிழ்சி…

    விமர்சனங்களுக்கு நன்றிகள்…

  5. maherajsaro சொல்வதென்னவென்றால்:

    தாங்கள் இன்னும் பல வெற்றிகளை… இரு துறைகளிலும் பெற தமிழ் உள்ளங்களின் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்….

    நேரம் கிடைத்தால்…
    (சமீபத்தில் இலங்கை நிகழ்வுகளுக்காக நான் எழுதிய வரிகளை இங்கு வாசிக்கவும்…)

    http://whereweliving.blogspot.com/2008/10/blog-post.html

    எதுவும் வேண்டாம்…. (இலங்கை தமிழர்களின் நிலை கண்ட பின்பு…)

  6. piriyan சொல்வதென்னவென்றால்:

    மிக்க மகிழ்சி…

    நன்றி…

  7. thiruvenkat2001 சொல்வதென்னவென்றால்:

    Sorry for typing in English , Please tell me how to change settings to type in Tamil.
    Ur poems are awesome and touching. Please one request write more poems touching the heart of youngsters like me and they should build up Tamil unarvu in them as many are forgetting their own language and praising the other languages. I am also a budding poet i can say ,right now i am in Dundee(Scotland) we Tamilians are planning t o start a tamilar sangam in that we are planning to improve Tamil feelings so if u can find time please let us know what we can do.It would be great pleasure for us if u write a poem based on this for us

    Thanking you
    Thiru

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்